நவீன மஸாயில்கள்
முன்னுரை
அல்ஹம்து லில்லாஹ்…..
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
மனித வாழ்க்கையை வடிவமைத்த அல்லாஹ் அவன் எப்படி வாழவேண்டும், எதை உண்ணவேண்டும் என எல்லாவற்றையும் வடிவமைத்து கொடுத்துள்ளான்.
குறிப்பாக உணவு,
ஒரு மனிதனின் ஹலாலான உணவு மட்டுமே அவனை இறைவனிடம் சேர்க்கப் போதுமானது. ஆனால் நவீன யுகம் இன்று எல்லாவற்றையும் இலகுவாக்குகிறது என்ற வகையில் எது ஹலால் , எவை ஹராமை என்பதை பொருட்களின் வெளி அட்டையிலும், விளம்பர பலகைகளிலும் பதித்துவிட்டது. முஸ்லிம்களாகிய நாமும் அதை அப்படியே நம்பிவிடுகிறோம். நம் துஆக்கள் அங்கிகரிக்கப்படாமைக்கு இது கூட காரணமாகலாம் என்பதை கவனத்தில் கொண்டு இன்று வெகு வேகமாக பரவிவரும் அந்நிய நாட்டின் இறக்குமதி இறைச்சி பற்றிய விழிப்புணர்வு ஆய்வு உங்களால் இப்போது படிக்கப்படுகிறது.
இது முழுமையும் நம்
சமூகத்திற்குப் பயனளிக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.
வஸ்ஸலாம்……
இப்படிக்கு
இறை பொருத்ததை
நாடும்
V. முஹம்மது
மன்சூர் கைரி இஸ்லாஹி B.com
லால்பேட்டை
மனிதனுக்கே…….
إِنَّمَا حَرَّمَ عَلَيْكُمُ الْمَيْتَةَ وَالدَّمَ وَلَحْمَ
الْخِنْزِيرِ وَمَا أُهِلَّ لِغَيْرِ اللَّهِ بِهِ فَمَنِ اضْطُرَّ غَيْرَ بَاغٍ
وَلَا عَادٍ فَإِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ
தானாக இறந்தவைகளும், இரத்தமும், பன்றி இறைச்சியும், அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்படாத இறைச்சியும் உங்களூக்கு ஹராம்(தடுக்கப்பட்டது) ஆகும். (16:115)
நபி ஸல் கூறினார்கள்:
இறைச்சி இவ்வுலக மக்களுக்கும் , நாளை சுவன வாசிகளுக்கும் சிறந்த உணவாகும்.
அபூதர்தா ரலி இப்னுமஜா 3805
இறைச்சி உண்பது கண் பார்வையை வலுவடையச் செய்யும்.
(திப்புந் நபவி)
மனிதனை இறைவன் அனைத்துண்ணியாக படைத்துள்ளான். அதற்கு மிகச்சிறந்த ஆதாரம் நமது பற்களின் அமைப்பு , கொஞ்சம் மாமிச உண்ணி விலங்குகளை கவனித்தால் முழுவதும் கோரைப்பற்களாக இருக்கும் . தாவர உண்ணி விலங்குகளை கவனியுங்கள் அனத்தும் தட்டை பற்களாக இருக்கும்,
நமது பற்களை கவனித்தால் இரு வகை பற்களும் வழங்கப்பட்டுள்ளோம். இது இறைவன் நம்மை அனைத்துண்ணியாக படைத்துள்ளான் என்பதற்கு நம்மிடம் உள்ள மிகச் சிறந்த ஆதாரம்.
இந்த உலகம் மனிதனுக்கானது. இதில் உள்ளவைகளை அனுபவிக்கும் முழு உரிமையும் மனிதனுக்கு உண்டு, அதனால் தான் அதிலும் மனிதனுக்கு தேவையான ஆற்றலை இறைவன் வைத்துள்ளான்.
உதாரணத்திற்கு;
1, ஆட்டிறைச்சியயை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் பார்வை கோளாறுகள் நீங்கி பார்வை வலுபெறுகிறது.
2, ஆட்டின் மூளை, தாது விருத்தியை அதிகப்படுத்துகிறது, நினைவாற்றலை பலப்படுத்தி மூளையை வலுப்படுத்துகிறது.
3, ஆட்டிறைச்சி உடல் சூட்டை தணித்து, தோலுக்கு வலிமை அடையச் செய்து, சருமம் பளபளக்க உதவுகிறது.
இன்னும் இது போல் அனைத்து நோய் நிவாரணங்களுக்கும் ஆட்டிறைச்சி சிறந்த தீர்வாகும். (நன்றி –Google அண்ணன்)
எனவே இறைவன் மனிதன் உண்பதற்காகவே சில ஜீவராசிகளை படைத்து அதனை நமக்கு குர்ஆன் ,ஹதீஸ்கள் மூலம் அறிமுகமும் செய்துள்ளான்.
எதை சாப்பிடலாம்? ? ? ?...
இறைச்சியை சாப்பிட அனுமதி அளித்துள்ள மார்க்கம் அதை எப்படி அறுத்து பயன் படுத்த வேண்டும் என்பதையும் வரையரறுத்துள்ளது. அதைப் பற்றிய மார்க்க மேதைகளின் கருத்துகளை தொடர்ந்து பேசலாம்…
இந்த விஷயத்தில் நான்கு இமாம்கள் இரு குழுவாக பிரிகிறார்கள்.
F ஹனபி மற்றும் மாலிகி :
ஓர் பிராணியை உண்பதற்காக அறுக்கும் போது அப்பிராணியின் கழுத்து நரம்புகளில் மூன்று நரம்புகள் அறுக்கப்பட வேண்டும்.
· கழுத்து நரம்பு
· உயிர் நாடியின் இரு நரம்புகள்.
கழுத்தில் இரு தாடைக்கும் , கழுத்தின் சங்கு பகுதிக்கும் நடு பகுதியில் அறுக்க வேண்டும்.
لقول النبي صلّى الله عليه وسلم : «الذكاة: ما بين الَّلبة
والِّلحية»
கழுத்தின் கீழ் பகுதி أسفل الع-
اللبة
நாடிக்குழியின் முடி شعر الذقن–اللحية
ومحله: آخر الحلق –النحر
F ஷாபி , ஹம்பலி :
உண்பதற்கு அனுமதிக்கப்பட்ட பிராணியின்
கழுத்து நரம்பை அறுத்தல் வேண்டும் அது கழுத்துக்கு கீழ் அல்லது மேல் பகுதியாகவோ இருக்கலாம்.
· அதாவது
ஹனபி மற்றும் மாலிகி
அறுக்க
வேண்டிய இடத்தை குறிப்பிடுகிறார்கள்.
· ஷாபி
மற்றும் ஹம்பலி கழுத்தில் அந்த பிராணியின் உயிர் போகும்படி அறுத்தல் வேண்டும் என அறுக்கும் இடம் குறிப்பிடவில்லை.
இந்த
முறையில்
உண்பதற்க்கு
அனுமதிக்கப்பட்ட பிராணியை
அறுத்திருந்தால் அதை மட்டுமே சாப்பிடலாம்.
(كتاب
الفقه علي المذاهب الاربعة)
தடை
ولقوله صلّى الله عليه وسلم : «ما أنهر الدم، وذكر اسم الله عليه،
فكلوا ما لم يكن سناً أو ظفراً، وسأحدثكم عن ذلك: أما السن فعظم، وأما الظُّفر
فمدى الحبشة» رواه
الجماعة عن رافع بن خديج (نيل الأوطار: 141/8)
பற்களால் , நகங்களால் கொல்லப்பட்ட பிராணிகளை உண்பதற்கு நபி ஸல் தடை விதித்துள்ளார்கள்.
மேலும் ,
நான்கு இமாம்களின் ஏகோபித்த கருத்தின் படி
Ø இறை நிராகரிப்பாளன்.
Ø இணை வைப்பவன்.
Ø நாத்திகன்.
Ø மார்க்கத்தை விட்டு மதம் மாறியவன்
ஆகியோர் அறுத்த பிராணியின் மாமிசம் உண்பது தடையாகும்.
(كتاب الفقه علي المذاهب الاربعة)
அறுப்பது யார்?
F முஸ்லிம்,
F வேதம் கொடுக்கப்பட்டவர்கள்.
வேதம் கொடுக்கப் பட்டவர்கள், (யூதர்கள், கிருஸ்தவகள்) அறுப்பதை உண்பது பற்றிய கருத்து வேறுபாடுகள் உள்ளன,
v ஹனபி- ஹம்பலி : பழைய மார்க்க சட்டங்களை பின்பற்றுபவர்கள் எனில் அவர்களுடைய கடைகளில் இறைச்சி வாங்குவது கூடும்.
v ஷாபி , மாலிகி: அல்லாஹ்வின் பெயர் இல்லாமல், மற்றவர்களின் பெயரில் அறுத்திருந்தால் கூடாது(ஈஸா, உஜைர்)
வேதம் கொடுக்கப்பட்டவர்களின் பழைய மார்க்கத்தில் நமக்கு எதையெல்லாம் ஹராமாக்கப்பட்டதோ அவை அனைத்தும் அவர்களுக்கும் ஹராம். அதை அப்படியே பின்பற்றும் வேதத்துடையவர்களுடையவர்களால் அறுக்கப்பட்டதை சாப்பிடலாம்.
(كتاب
الفقه علي المذاهب الاربعة)
இறக்குமதி செய்யப்படும் இறைச்சிப் பற்றி….
இன்றைய உலகம் எல்லாவற்றையும் வியாபாரமாக்கி விட்டதால் இறைச்சியும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பொருளாகி விட்டது.
எனவே இதைப்பற்றி சவூதி அரசு ஓர் குழுவை ஏற்படுத்தி உலகின் பல பாகங்களில் உள்ள இறைச்சி நிறுவனகளின் நிலை பற்றி ஆய்வு செய்து அதன் முடிவுகளை வெளியிட்டது.
அவை சுருக்கமாக உங்கள் பார்வைக்கு
ü இஸ்லாமிய நாடுகளுக்கு இறைச்சி ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களில் (ஹலாலு சாதிக்) பெரும்பாலும் காதியானிகள் நிறுவகிக்கின்றனர். அவர்கள் இஸ்லாமிய சட்டங்களை பின் பற்றுவதில்லை. எனவே இவை ஹராம் .(இல்முல் இஸ்லாமி எனும் பத்திரிக்கை துறை தலைவர்)
ü இறைச்சியின் அட்டை மேல் ஹலால் என்னும் ஸ்டிக்கர் ஒட்டும் நபர்களுக்கு உன்மையில் அது ஹலால என்ற தெளிவு இல்லை, மேலும் இறைச்சியை அறுப்பவன் எந்த மதம் அல்லது கொள்கையை சார்ந்தவன் என்பது தெளிவாகவில்லை. (அஹ்மது பின் சாலிஹ் மஹாயிரி)
ü சரியாக இஸ்லாமிய சட்டங்கள் பின்பற்றப் படுகிறதா? என கவன்னிக்காத மேலாளர்கள் நிறந்துள்ளனர்.
ü பிராணிகள் மின்சாரம் மூலம் கால் பகுதியிலிருந்து கொல்லப்படுகின்றன. பின்பே கழுத்தின் நரம்புகள் துண்டிக்கப் படுகிறன்.
ü கருவிக்குள் உயிருடன் செல்லும் பிராணிகள் தண்ணீரில் மூழ்க வைக்கப்பட்டு மின்சாரம் பாய்ச்சப் பட்டு இறந்த நிலையில் வெளியேற்றப் படுகின்றன.
(லஜ்னத்துத் தாயிமத்து லில்புஹூஸி அல் அலமிய்யத்து வல் இஃப்தா)
மேற்கூறிய முறைகள் அல்லாமல் இன்னும் பல வழிகளில் பிராணிகள் மார்க்கச் சட்டத்தினை பின்பற்றாமல் கொல்லப்படுகின்றன்.
நான்கு இமாம்களின் கருத்தின்படி இவைகள் அனைத்தும் ஹராம் ஆகும்.
(قضايا
فقهية معاصرة)
தீர்வு என்ன?
F தம் நாட்டிலேயே இறைச்சி நிறுவனங்கள் தோற்றுவிக்கப்பட வேண்டும்
F முஸ்லிம்களை இதற்காக ஊக்குவிக்க வேண்டும்
F முஸ்லிம் நிறுவனங்களில் மட்டுமே இறைச்சியை வாங்க வேண்டும்.
F முடிந்தவரை அந்நிய நிறுவனங்களை புறக்கணிக்க வேண்டும்.
(قضايا فقهية معاصرة)
Part – 2
நவீன மஸாயில்கள்
1
நவீன மின்சார கருவிகள் மூலம் பிராணிகளை அறுக்கலாமா???
பிஸ்மி சொல்பவரும் அறுப்பவரும் ஒன்றாக இருக்க வேண்டும்.
)
ஃபதாவா ஹிந்தியா(
இதை அறுக்கும் கருவியோடு ஒப்பிட்டால் பிஸ்மி சொல்பவர் வேறு அறுக்கும் கருவி வேறு என்று பிரிந்து விடுவதால் கூடாது.
அறுப்பவர் பிஸ்மில்லாஹ் சொல்வது அல்லது நிய்யத் வைப்பது அவசியமாகும். இது தவறுவதால் இந்த வகையில் அறுப்பது கூடாது.
பட்டனை தட்டுபவரே அறுப்பவர் என்று சொல்லலாமே…?
அவர் ஒரு முறை மட்டுமே பிஸ்மில்லாஹ் சொல்லி பட்டனை தட்டுவார் ஆனால் அதன் மூலம் பல பிராணிகள் அறுக்கப்படும். ஒவ்வொரு பிராணிக்கும் தனித்தனியாக பிஸ்மில்லாஹ் சொல்லவேண்டும் என்ற சட்டம் மீறப்படுகிறது.
மேலும் அறுக்கும் கருவி நமது கையில் இருத்தல் வேண்டும், ஆனால் கருவி விஷயத்தில் நாம் அருகில் இருத்தலே போதுமாகிறது. இது கூடாது.
இமாம் கஸானி கூறுகிறார்கள்:
வேட்டை பிராணி அனுப்புவது போல்தானே கருவி ?
வேட்டை பிராணி அனுப்புவது நிர்பந்த நிலை, ஆனால் கருவி பயன்படுத்துவது நம் சுய விருப்ப நிலையாகும்.
கருவிகள் வேறு வேட்டை பிராணி வேறு.
மேலும் அறுப்பதால் இரத்தம் வழிந்து ஓட வேண்டும் என்பதும் ஷர்த்தாகும் ஆனால் சில கருவிகள் இரத்தத்தை வெளியாக்குவதில்லை.
கீழ் உள்ள நிபந்தனைகல் நிகழ்ந்திருந்தால் கருவியில் அறுத்தல் கூடும்:
1, அந்த கருவியில் பிராணியை வைக்கும் போது அது உயிருடன் இருக்க வேண்டும்.
2, பிஸ்மில்லாஹ் சொல்லும் போது எந்த பிராணியை அந்த கருவி வெட்டுகிறதோ அந்த பிராணி மட்டுமே ஹலால் ஆகும்.
3, அந்த பிராணியை பிடித்து இருப்பவர் முஸ்லிமாக இருத்தல் வேண்டும். சாதாரணமாக நாம் அறுக்கும் போது இந்த நிபந்தனை இல்லை.
எனவே கருவிகள் மூலம் பிராணியை அறுப்பது கூடாது
{ اردو) ( جديد فقهي مسائل}
2
மின்சாரம் மூலம் பிராணியை பலியிடலாமா????
மின்சாரம் மூலம் பிராணியை பலியிடும் போது இரத்தம் உரைந்து விடுவதற்கோ அல்லது அந்த பிராணி இறந்து விடுவதற்கோ வாய்ப்புள்ளது. அதனால் இந்த முறை மக்ரூஹ் ஆகும்.
என்றாலும் ,
மின்சாரம் பாய்ச்சியதற்க்குப் பின்பும் அந்த பிராணி உயிருடன் இருந்தால் அப்போது அதனை முறைப்படி அறுத்தால் அது ஹலால் ஆகும். ஆனால் அந்த பிராணி நன்கு திடமாக இருக்க வேண்டும். அது மின்சாரம் பாய்ச்சியதால் மரணிக்கும் இறுதி நிலையை அடைந்து விட்டால் கூடாது.
நாம் அறுக்க வேண்டிய மூன்று நரம்புகளில் இரத்த ஓட்டம் சீராக இருந்தால் அப்போது அதை அறுப்பது கூடும்.
நெருப்பில் விழுந்த பிராணியை மீட்டபின்பு அதில் உயிர் இருந்து அதன் நரம்புகள் முறைப்படி அறுக்கப்பட்டு இரத்தம் ஓடினால் அதை பயன்படுத்துவது கூடும்.
{ اردو ( جديد فقهي مسائل}
Comments
Post a Comment